ADDED : ஜூலை 03, 2026 03:16 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: பி.எஸ்.பாளையம் பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு விருந்தினராக வில்லியனுார் மேற்கு போக்குவரத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமரன் சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் இடையே போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பாக கலந்துரையாடினர்.
நிகழ்ச்சியில் பள்ளி துணை முதல்வர் ராமமூர்த்தி, தலைமையாசிரியை சசிகலா, பட்டதாரி ஆசிரியை இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் சுதந்திரம், நுண்கலை ஆசிரியர் ரகுநாத் ஆகியோர் செய்திருந்தனர்.
