/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திப்புராயப்பேட்டை பகுதியில் கலெக்டர், எம்.எல்.ஏ., ஆய்வு
/
திப்புராயப்பேட்டை பகுதியில் கலெக்டர், எம்.எல்.ஏ., ஆய்வு
திப்புராயப்பேட்டை பகுதியில் கலெக்டர், எம்.எல்.ஏ., ஆய்வு
திப்புராயப்பேட்டை பகுதியில் கலெக்டர், எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : ஏப் 23, 2025 04:08 AM

புதுச்சேரி : திப்புராயப்பேட்டையில் லெப்ரசி மாற்றுத்திறனாளிகள் குடியிருப்பு பகுதிகளில் கலெக்டர் குலோத்துங்கன், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டனர்.
உப்பளம் தொகுதி திப்புராயப்பேட்டை லாசர் கோவில் வீதியில் லெப்ரசி மாற்றுத்திறனாளிகள் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.
அவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்ககோரி, தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, முதல்வர் அப்பகுதியை பார்வையிட்டு, மனைப்பட்டா வழங்க கலெக்டருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கலெக்டர் குலோத்துங்கன், நில அளவை இயக்குநர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் கந்தசாமி, தாசில்தார் பிரிதிவி ஆகியோர் நேற்று அப்பகுதியை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அப்பகுதி மக்கள் 30 ஆண்டுகளுக்கு மேல் இப்பகுதியில் வசித்து வருவதாகவும், எங்களுக்கு இதே இடத்தில் இலவச மனைப்பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, கலெக்டர் அரசுடன் கலந்து ஆலோசனை செய்து தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.