/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பருவ மழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் அரசு துறைகளுக்கு கலெக்டர் உத்தரவு
/
பருவ மழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் அரசு துறைகளுக்கு கலெக்டர் உத்தரவு
பருவ மழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் அரசு துறைகளுக்கு கலெக்டர் உத்தரவு
பருவ மழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் அரசு துறைகளுக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : ஆக 20, 2025 07:27 AM

புதுச்சேரி : புதுச்சேரி அரசு மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பருவமழையை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். சப் கலெக்டர்கள் இசிட்டா ரதி, அங்கித் குமார், சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள், நகராட்சி மற்றும் கொம்யூன் ஆணையர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கலெக்டர் குலோத்துங்கன் பேசுகையில், 'பருவ மழை துவங்குவதற்கு முன் அடுத்த மாதத்திற்குள் அனைத்து நீர்வரத்து வாய்க்கால்களையும் துார்வார வேண்டும். வாய்க்கால் அடைப்புகளை சரி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அனைத்து குடிநீர் தொட்டிகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மழைக்காலங்களில் கூடுதல் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்க வேண்டும். பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். மழைக் காலத்தில் 24 மணி நேரமும் அரசு ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும்.
கடந்த முறை நீர் தேங்கிய கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர் மற்றும் பூமியான்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வாய்க்கால்களை துார்வாரி மீண்டும் நீர் தேங்காத வகையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் சாத்தனுார் மற்றும் வீடுர் அணைகள் திறக்கும் போது, கரையோர மக்கள் பாதிக்காத வகையில் தமிழக அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
கொம்யூன் ஆணையர்கள், தங்களது பகுதியில் உள்ள ஏரிகளையும் தினசரி கண்காணிக்க வேண்டும். போதிய மருந்து மாத்திரைகள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென, அறிவுறுத்தினார்.

