/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்லுாரி பேராசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
/
கல்லுாரி பேராசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
ADDED : செப் 24, 2024 06:25 AM
புதுச்சேரி : அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பேராசிரியர்கள் நலச்சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு போராட்டம் நாளை 25ம் தேதி நடக்கிறது.
நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம் பகுதிகளில் பணிபுரியும் 185 அரசு கல்லுாரி பேராசிரியர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக ஊதிய உயர்வு, பதவி உயர்வு, கிரேட் பே வழங்கப்படவில்லை. கடந்த 2014ம் ஆண்டு, 180 உதவி பேராசிரியர்கள், இனை பேராசிரியர்களாக மாற்றும் பதவி உயர்வு கொடுக்க, கோப்புகள் தயாரன நிலையில், அந்த கோப்புகளை உயர்கல்வித்துறை இயக்குனர் நிறுத்தி வைத்துள்ளார்.
தற்போது உயர்கல்வித்துறை 26 உதவி பேராசிரியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வுக்கு அனுப்பி வைத்துள்ளது. மீதமுள்ள 145 உதவி பேராசிரியர்களுக்கு தகுதி இல்லை என கூறி திருப்பி அனுப்பியுள்ளது. உயர்மட்ட குழுவின் பரிந்துரையை 8 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி அனுப்பியதை இச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
பல்கலைக்கழக மானியக்குழு 2018 பரிந்துரைப்படி இந்த மாத இறுதிக்குள் ஊதிய உயர்வு, பதவி உயர்வினை இணை பேராசிரியர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை( 25ம் தேதி) உயர்கல்வித்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். காரைக்கால், மாகி, ஏனம் பிராந்தியங்களில் அந்தந்த கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.