தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலி

கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலி

கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலி


ADDED : ஜன 26, 2025 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2025 05:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம் : கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அலங்கார மின் விளக்குகள் அமைத்த கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி இறந்தார்.

விழுப்புரம் அடுத்த ராம்பாக்கம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மகன் ஹரிதரன்,18; கடலுார் அரசு கல்லுாரியில் பி.எஸ்சி., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

ராம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக நேற்று முன்தினம் மாலை ஹரிதரன், அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் சவுண்ட் சர்வீஸ் மூலமாக அலங்கார மின்விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒயர் இணைக்கும்போது எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள உயரழுத்த மின் கம்பியில், அவரது கை பட்டதில், மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார்.

உடன் அவரை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தார். புகாரின் பேரில் வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us