/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பைக்கில் இருந்து விழுந்த கல்லுாரி மாணவர் பலி
/
பைக்கில் இருந்து விழுந்த கல்லுாரி மாணவர் பலி
ADDED : மார் 15, 2024 05:55 AM
புதுச்சேரி: பைக்கில் இருந்து கீழே விழுந்த மாணவர் இறந்தார்.
ஏனாம் தீயணைப்பு துறையில் பணிபுரிந்து வருபவர் சீனுவாசன். இவரது மகன், மோகன் கிருஷ்ணன்,19; இவர் ஏனாமில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இவர் தனது  தந்தை சீனுவாசனை பைக்கில் அழைத்துச் சென்று தீயணைப்பு துறையில் விட்டு விட்டு திரும்பினார்.
அப்போது நாய்கள், அவரை துரத்தியது. அதில் பயந்துபோன, அவர் பைக்கை வேகமாக ஓட்டியபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த அவரை  காக்கிநாடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவர் இறந்தார்.
ஏனாம் போலீசார் வழக்குப்  பதிந்து விசாரித்து வருகின்றனர்.

