வேளாண் கல்லுாரி மாணவர்கள் விவசாயிகளுடன் கலந்துரையால
வேளாண் கல்லுாரி மாணவர்கள் விவசாயிகளுடன் கலந்துரையால
ADDED : செப் 23, 2026 07:32 PM

வில்லியனுார்: தொண்டமாநத்தம் கிராமத்தில் விவசாய சாகுபடியில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகள் குறித்து கலந்துரையாடல் நடந்தது.
தொண்டமாநத்தம் கிராமத்தில் மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி இளங்கலை இறுதி ஆண்டு மாணவிகள் கடந்த இரண்டு மாதங்களாக கிராமத்தில் ஊரக வேளாண் அனுபவ பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
வேளாண் கல்லுாரி உதவி பேராசிரியர் ராவ் கெளுஸ்கர் தலைமையில், உதவி பேராசிரியர் பிரகாஷ் வழிகாட்டுதலின் பேரில் நடந்த நிகழ்ச்சியில் மாணவி குமாரிதரணி வரவேர்றார். விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், ஊரக பங்கேற்பு மதிப்பீட்டின் மூலம் விவசாய சாகுபடியில் தற்போது எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகள் கண்டறிந்தனர். தொடர்ந்து காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர்சேதம், தொழிலாளர்கள் பற்றாக்குறை , காலநிலை மாற்றம், பொதுப் பிரச்னைகள் அடையாளம் கண்டறியப்பட்டது.
பிரச்னைகளுக்கான வேளாண் தொழில்நுட்ப மற்றும் நடைமுறை தீர்வுகள் மற்றும் அனுபவங்களை வேளாண் கல்லுாரி மாணவிகள் சேகரித்தனர். குமாரி காயத்ரி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை தொண்டமாநத்தம் உழவர் உதவியக வேளாண்துறை அலுவலர் சங்கரதாஸ் மற்றும் ஊழியர்கள் செய்தனர்.
