ADDED : செப் 23, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி இ.சி.ஆரில், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
டிநகர் போலீசார் நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் இ.சி.ஆர்., ஏர்போர்ட் சாலை சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக தகவல் கிடைத்தது.
அங்குள்ள கடையில், போலீசார் சோதனையிட்டதில், 31 பண்டல்களில், ஹான்ஸ், 43 பண்டல் கூலிப் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கடை உரிமையாளரான வினோபாநகர் ஜான்பியர், 52, கைது செய்து, ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
