தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சபாநாயகர் பதவி பா.ஜ.,விற்கு தான் முன்னாள் சபாநாயகர் செல்வம் தகவல்

சபாநாயகர் பதவி பா.ஜ.,விற்கு தான் முன்னாள் சபாநாயகர் செல்வம் தகவல்

சபாநாயகர் பதவி பா.ஜ.,விற்கு தான் முன்னாள் சபாநாயகர் செல்வம் தகவல்


ADDED : செப் 23, 2026 07:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 07:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சபாநாயகர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் பதவிகள் பா.ஜ.,விற்கு தான், என முன்னாள் சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து படிப்படியாக அமைச்சர்கள் நியமிக்கப்படனர்.

அமைச்சர்களுக்கு இலாகாக ஒதுக்க வேண்டும். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம் நடத்தின. அரசியல் கட்சிகளும் தொடர்ந்து இதே கருத்தை வலியுறுத்தனர். நீண்ட இழுபறிக்குப்பின் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

ஆனால், சபாநாயகர் தேர்தல் நடத்தவில்லை. துணை சபாநாயகர் பதவியும் நிரப்பப்படவில்லை. இதற்கிடையில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் முதல் கூட்டத்தொடரையும் நடத்தி முடித்து விட்டார். இந்நிலையில், நேற்று பா.ஜ., தலைமை அலுவலகத்தில், மாநில தலைவர் ராமலிங்கம், முன்னாள் சபாநாயகர் செல்வம் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் சபாநாயகர் செல்வம், புதுச்சேரி சபாநாயகர் பதவி பா.ஜ.,விற்கு வழங்கப்படும் என, மேலிடப் பொறுப்பாளர் தெளிவாக தெரிவித்துள்ளார். 3 நியமன எம்.எல்.ஏ.,க்களையும் பா.ஜ.,வே நியமிக்கும். வாரிய தலைவர்கள் நியமனம் குறித்து முதல்வர் முடிவு செய்வார்’ என்றார்.

சபாநாயகர், துணை சபாநாயகர் யார் என தேசிய ஜனநாயக கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில், முன்னாள் சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ள கருத்து, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us