ADDED : அக் 07, 2024 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில் மழலையர் மாணவர்களுக்கான கலர்ஸ் டே விழா கொண்டாடப்பட்டது.
தலைமையாசிரியர் கோமதி தலைமை தாங்கினார். ஆசிரியர் வெற்றிவேல் வரவேற்றார். ஆசிரியர்கள் லதா, கோமளா, சாமுண்டீஸ்வரி, வீரக்கதிரவன் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் வண்ணங்கள் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

