ADDED : அக் 02, 2024 04:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வி.மணவெளி அரசு தொடக்கப் பள்ளியில் கலர்ஸ் டே, அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பொறுப்பாசிரியர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். விழாவில், பறவைகள், பூச்சிகள் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டது. வண்ணங்களின் முக்கியத்துவும் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு,வெற்றி பெற்ற பெற்றோர்கள், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. ஆசிரியை ராஜ திலகம் நன்றி கூறினார்.

