ADDED : செப் 11, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முத்திரையர்பாளையம் அருட்செல்வி ஆயி அம்மாள் நடுநிலைப் பள்ளி முன் மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கு இளஞ்சிவப்பு வண்ண விழா கொண்டாடப்பட்டது.
ஆசிரியர் சரோஜா வரவேற்றார். விழாவில் மாணவர்கள் பிங்க் நிற உடையணிந்து பிங்க் நிற பூக்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.
உணவு விழாவும் நடத்தப்பட்டது. மாணவர்கள் தங்களது பெற்றோர்கள் உதவியுடன் சமைத்த பல வகையான சிறுதானிய உணவுப் பண்டங்களை காட்சியப்படுத்தினர். தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி சிறப்புரை ஆற்றினார். ஆசிரியர் சிவமதி நன்றி கூறினார்.
