தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இந்தியன் கான்கிரீட் இன்ஸ்டிடியூட் விருது வழங்கும் விழா

இந்தியன் கான்கிரீட் இன்ஸ்டிடியூட் விருது வழங்கும் விழா

இந்தியன் கான்கிரீட் இன்ஸ்டிடியூட் விருது வழங்கும் விழா


ADDED : செப் 11, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்தியன் கான்கிரீட் இன்ஸ்டிடியூட் (ஐ.சி.ஐ.) புதுச்சேரி மையம் சார்பில், ஓட்டல் ஆனந்தா இன்னில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவில், இந்தியன் கான்கிரீட் இன்ஸ்டிடியூட் புதுச்சேரி மையத்தின் தலைவர் ரமேஷ் வரவேற்றார். கான்கிரீட் கட்டுமானம், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் புதுச்சேரியில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இந்தியன் கான்கிரீட்  இன்ஸ்டிடியூட் துணைத் தலைவர் (தென் மண்டலம்) நாகேந்திரா, பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் மூத்த பிரதிநிதிகளுடன் இணைந்து விருதுகள் வழங்கப்பட்டன.

கே.பி.ஆர்., நிறுவன தொழில்நுட்ப பொறியியல் இயக்குநர் வேல்முருகன் சிறப்புரையாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் குமரன்,  ஐ.சி.ஐ., புதுச்சேரி மையத்தின் முன்னாள் தலைவர் சுரேஷ், கட்டட கலைஞர் வைத்தியநாதன், புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக பேராசிரியர் ஈஸ்வரி, ஆதித்யா பிர்லா வயர் அண்ட் கேபிள்ஸ் நிறுவன தலைவர் ஜெயசங்கர், அல்ட்ராடெக் மண்டல தலைவர் புன்னுாஸ் பி ஜான், நடேஷ், பிராந்தியத் தலைவர் வினோத் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, கலை நிகழ்ச்சி,  கட்டுமானப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் கண்காட்சி இடம்பெற்றன. ஏற்பாடுகளை ஐ.சி.ஐ., புதுச்சேரி மைய துணைத் தலைவர் அண்ணாமலை, பொருளாளர் நாகராஜ், இணைச் செயலாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

செயலாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us