/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புற்றுநோய் கண்டறியும் கோல்போஸ் கோப்பை நவீன கருவி செயல் விளக்கம்
/
புற்றுநோய் கண்டறியும் கோல்போஸ் கோப்பை நவீன கருவி செயல் விளக்கம்
புற்றுநோய் கண்டறியும் கோல்போஸ் கோப்பை நவீன கருவி செயல் விளக்கம்
புற்றுநோய் கண்டறியும் கோல்போஸ் கோப்பை நவீன கருவி செயல் விளக்கம்
ADDED : பிப் 05, 2025 06:13 AM

புதுச்சேரி: புதுச்சேரி, ராஜிவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவ மனையில், புற்று நோய் தினத்தையொட்டி, நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மருத்துவ கண்காணிப்பாளர் ஐயப்பன் தலைமை தாங்கினார். மக்கள் தொடர்பு அதிகாரி குருபிரசாத் வரவேற்றார். உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரொசாரியா முன்னிலை வகித்தார். மகளிர் சிறப்பு மருத்துவர் டயானா, புற்று நோய் தடுப்பதற்கான வழிமுறைகள், பாதுகாப்பு குறித்து செயல் விளக்கம் அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, மருத்துவ கண்காணிப்பாளர் கூறுகையில்,
புற்றுநோய் பரிசோதனைக்காக நவீனமான, கோல்போஸ் கோப்பை மிஷின் வழங்க இருக்கிறது. அதற்கான டெமோ குறித்து, விளக்கம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட, இந்த மிஷின் மூலம், மருத்துவர்கள் மிகவும் துல்லியமாக, விரைவாகவும், ஆரம்பத்திலேயே புற்று நோய் அறிகுறிகளை கண்டறிய முடியும். வாய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோயை கண்டறிந்து, உடனடியாக நோயாளிகளுக்கு தடுப்பூசி மூலம் சிகிச்சை அளிக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.