/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நகைச்சுவை போட்டி பரிசளிப்பு விழா
/
நகைச்சுவை போட்டி பரிசளிப்பு விழா
ADDED : ஏப் 29, 2025 04:21 AM
புதுச்சேரி: புதுச்சேரி நகைச்சுவை மன்றம் சார்பில், நகைச்சுவை போட்டிக்கான, பரிசளிப்பு விழா, அரசு ஊழியர்கள் சம்மேளனக் கூடத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு நகைச்சுவை மன்றத்தின் தலைவரும், முதன்மை கல்வி அலுவலர் குலசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாரதிராஜா வரவேற்றார். செயலர் மோகன்ராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக கலைமாமணி ராஜன் கலந்து கொண்டு பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நகைச்சுவை மன்றத்தின் நிறுவனர் குப்புசாமி வாழ்த்துரை வழங்கினார். பொருளாளர் ஜெயபிரகாஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கோவில்பட்டி மனமகிழ் மன்ற செயற்குழு உறுப்பினர் சுரேஷ் கருத்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை கலந்து கொண்டு, நகைச்சுவை கூறும் நிகழ்வு, நகைச்சுவை நாடகம் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை செயற்குழு உறுப்பினர் நிகமாந்த தேசிகன் செய்திருந்தார்.
இணைச் செயலர் சுரேந்தர் நன்றி கூறினார்.

