/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழக முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு
/
தமிழக முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : ஆக 08, 2025 02:15 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
குபேர் சாலையில் உள்ள மேரி ஹாலில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு, முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, எதிர்கட்சி தலைவர் சிவா, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கரன், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், தி.மு.க., அவை தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் கருணாநிதி படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக தி.மு.க., வினர் அமைப்பாளர் சிவா தலைமையில் சுதேசி மில் அருகில் இருந்து ஊர்வலமாக சென்று அண்ணாதுரை சிலை அருகே அலங்கரிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், அவை தலைவர் சிவக்குமார், துணை அமைப்பாளர் அனிபா ல் கென்னடி, பொருளாளர் செந்தில்குமார், இளைஞரணி அமைப்பாளர் சம்பத், துணை அமைப்பாளர்கள் குமார், தைரியநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மூர்த்தி, நந்தா சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் லோகையன், ஆறுமுகம் , காந்தி, அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் சண்முகம், கோபால், கார்த்திகேயன், ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.