/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணை பிரதமர் நினைவு நாள் அனுசரிப்பு
/
துணை பிரதமர் நினைவு நாள் அனுசரிப்பு
ADDED : ஜூலை 07, 2025 01:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் முன்னாள் துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, செல்வகணபதி எம்.பி., சாய் சரவணன் குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்., சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.