/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல் உலக போர் நிறைவு நாள் நினைவு தினம் அனுசரிப்பு
/
முதல் உலக போர் நிறைவு நாள் நினைவு தினம் அனுசரிப்பு
முதல் உலக போர் நிறைவு நாள் நினைவு தினம் அனுசரிப்பு
முதல் உலக போர் நிறைவு நாள் நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : நவ 12, 2025 07:53 AM

புதுச்சேரி: முதல் உலகப்போர் நிறைவு பெற்றதன் 107-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
அதனையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர் நினைவுத் துாணில் இந்தியாவிற்கான பிரெஞ்சுத் துாதர் தியரி மாத்துா, புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டுத் துணைத் துாதர் எட்டியென் ரோலண்ட் - பியக் மற்றும் புதுச்சேரி அரசு சார்பில், கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் மலர் வளையம் வைத்து முதல் உலகப்போரில், உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, இந்தியா, பிரான்ஸ் நாட்டின் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, இரு நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பிரான்ஸ் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த இந்நாள், முன்னாள் ராணுவ வீரர்கள், முதல் உலகப் போரில் இறந்த வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.