/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அவதுாறு பரப்பினால் மான நஷ்ட வழக்கு இந்திய கம்யூ., செயலாளருக்கு சேது செல்வம் எச்சரிக்கை

ADDED : நவ 12, 2025 07:49 AM
புதுச்சேரி: இந்திய கம்யூ., செயற்குழு உறுப்பினர் மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி.,மாநில செயலாளர் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக சேது செல்வம் கடந்த 9ம் தேதி அறிவித்தார்.
அவர், கட்சி கொள்கைக்கு எதிராக கட்டப்பஞ்சாயத்தில் ரூ.15 லட்சம் வாங்கியதால் ஓராண்டிற்கு சஸ்பெண்ட் செய்துள்ளதாக, அக்கட்சியின் மாநில செயலாளர் சலீம் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதனை மறுத்த சேதுசெல்வம், கூறியதாவது.
நான் எந்த தவறும் செய்யவில்லை; பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பால்ராஜ், தனது இடத்தில் வாடகைக்கு இருக்கும் சிவக்குமார் காலி செய்யாததால், இடத்தை விற்க முடியவில்லை. அதனை என்னை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார். இல்லையெனில் வேறு யாரிடமாவது விற்றுத் தர கூறினார்.
என்னிடம் பணமில்லை. எனது தம்பி ரூ.5 லட்சம் முன் பணமாக கொடுத்தார். பின், சிவக்குமாரே அந்த இடத்தை ரூ. 3 கோடிக்கு வாங்கிக் கொள்வதாக கூறினார். அதனை பால்ராஜ் ஒப்புக் கொண்டார்.அதனால், எனது தம்பி கொடுத்த ரூ.5 லட்சத்தை எனது பெயரில் செக்காக கொடுத்தார். இதுவே நடந்தது. ஆனால் நான் கட்டப்பஞ்சாயத்து மூலம் ரூ.15 லட்சம் வாங்கியதாகவும், வரும் தேர்தலில் ஜே.சி.எம்., அல்லது காங்., கட்சியில் போட்டியிட பேசிவருவதாக தெரிவித்துள்ளனர்.தட்டாஞ்சாவடி தொகுதியை தி.மு.க.,விற்கு விட்டுக் கொடுப்பதற்காக என்மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
மினிட்ஸ் புத்தகத்தில் என்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கினர்.நான் ரூ.4 கோடி வாங்கியதாக பொய்யான குற்றச்சாட்டகளை கூறி அவதுாறு பரப்புவோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன்' என்றார்.