
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : லாஸ்பேட்டை குமரன் நகரில் ரூ. 18.36 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாட்டு பணி துவக்கப்பட்டது.
லாஸ்பேட்டை தொகுதியில் எம்.எல்.ஏ., நிதி 18.36 லட்சம் ரூபாய் மதிப்பில், குமரன் நகர் முதல் மெயின்ரோடு, குமரன் நகர் விரிவு 3, 4 மற்றும் 10வது குறுக்கு தெரு சாலைகள், புதிய தார் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதற்கான பணி துவக்க விழா உழவர்கரை நகராட்சி சார்பில் நடந்தது.
வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் மற்றும் லாஸ்பேட்டை தொகுதி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

