ADDED : ஏப் 13, 2026 11:34 PM

அ நிறம் | அளவு
வில்லியனுார்: புதுச்சேரி ஒப்பந்ததாரர்கள் நலசங்கம் சார்பில் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அதிகபடியான வாக்கு பதிவு நடந்ததற்கு காரணமாக இருந்த கலெக்டர் குலோத்துங்கனுக்கு பாராட்டி வாழ்த்தினர்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் சிறப்பாகவும், நேர்மையாகவும், அமைதியான முறையில் இதுவரையில் இல்லாத வகையில் அதிக படியான வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு காரணமாக இருந்த கலெக்டர் குலோத்துங்கனை, புதுச்சேரி ஒப்பந்ததாரர்கள் நலசங்க தலைவர் புகழேந்தி, செயலாளர் வேலுசாமி மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.
