/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காய்கறி, பழ கடைகளில் ஆணையர் ஆய்வு
/
காய்கறி, பழ கடைகளில் ஆணையர் ஆய்வு
ADDED : ஜன 10, 2026 05:26 AM

நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கத்தில் உள்ள காய்கறி, பழக் கடைகளில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் குப்பைகள் பிரித்தெடுப்பது குறித்து கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், மக்கும், மக்காத குப்பைகள் பிரித்தெடுப்பது குறித்து கடை உரிமையாளர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கி, கடைகளில் ஆய்வு செய்து கடை உரிமையாளர்களுக்கு காய்கறி, பழங்களில் இருந்து வரும் கழிவுகளை வீதிகளில் வீசாமல் தனியாக பிரித்து அங்கேயே வைத்து, குப்பை வண்டி வரும்போது, போட வேண்டும் என, அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குப்பை எடுக்கும் வாகனம் தினமும் வீடுகளுக்கு வந்து குப்பை எடுக்கின்றனரா என கேட்டறிந்தார். குப்பை வண்டி வருவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் புகார் அளிக்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நெட்டப்பாக்கம், மடுகரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உதவி பொறியாளர் ராமலிங்கேஸ்வரர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

