/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரதமர் வீடு கட்டும் திட்டம்; பயனாளிகளை தேர்வு செய்ய குழு
/
பிரதமர் வீடு கட்டும் திட்டம்; பயனாளிகளை தேர்வு செய்ய குழு
பிரதமர் வீடு கட்டும் திட்டம்; பயனாளிகளை தேர்வு செய்ய குழு
பிரதமர் வீடு கட்டும் திட்டம்; பயனாளிகளை தேர்வு செய்ய குழு
ADDED : ஜன 31, 2025 12:29 AM
புதுச்சேரி; மத்திய அரசு பிரதமர் ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யவும், கண்காணிக்கவும் மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி வீட்டு வசதித்துறை சார்பு செயலர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
மத்திய அரசு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற வீடு கட்டும் திட்டத்தைசெயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யவும், கண்காணிக்கவும் மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழு தலைவராக தலைமை செயலாளர், துணை தலைவராக வீட்டு வசதித்துறை செயலர், உறுப்பினர்களாக நிதி, மின்சாரம், பொதுப்பணி,உள்ளாட்சி, வருவாய் சுற்றுச்சூழல், சமூக நலத்துறை செயலர்கள்,உறுப்பினர் செயலராக முதன்மை நகர அமைப்பு அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பயனாளிகளை தேர்வு செய்ய புதுச்சேரி, காரைக்காலில் கலெக்டர் தலைமையிலும், மாகி, ஏனாம் பிராந்தியத்தில் மண்டல நிர்வாகி தலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

