/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணலிப்பட்டில் சாலை பணி கொம்யூன் ஆணையர் ஆய்வு
/
மணலிப்பட்டில் சாலை பணி கொம்யூன் ஆணையர் ஆய்வு
ADDED : பிப் 07, 2025 03:56 AM

திருக்கனுார் : மணலிப்பட்டில் சாலையின் நடுவே அனுமதியின்றி அமைத்திருந்த குடிநீர் இணைப்புகளை துண்டிக்க ஆணையர் உத்தரவிட்டார்.
மண்ணாடிப்பட்டு தொகுதியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், கொம்யூன் பஞ்சாயத்து மூலம் கிராமப்புறங்களில் புதிதாக சாலைகள், குடிநீர் குழாய் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும்படி, அமைச்சர் நமச்சிவாயம் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் தலைமையில், அதிகாரிகள் நேற்று முன்தினம் மணலிப்பட்டு கிராமத்தில், பாட்கோ மூலம் நடந்து வரும் சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சாலையின் நடுவே அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த மூன்று குடிநீர் குழாய்களை உடனடியாக அகற்றிட ஊழியர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டார். மேலும், அப்பகுதியில் நடந்து வரும் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினர்.
ஆய்வின்போது, உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் ஆனந்தன், பாட்கோ இளநிலை பொறியாளர் முரளி, முருகசாமி ஆகியோர் உடனிருந்தனர்.