/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்க மா.கம்யூ., வலியுறுத்தல்
/
ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்க மா.கம்யூ., வலியுறுத்தல்
ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்க மா.கம்யூ., வலியுறுத்தல்
ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்க மா.கம்யூ., வலியுறுத்தல்
ADDED : அக் 14, 2024 03:59 AM
பாகூர், : ரேஷன் கடைகளை திறந்து உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என, பாகூரில் நடந்த மா. கம்யூ., மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மா. கம்யூ.,பாகூர் கொம்யூன் 24வது மாநாடு பாகூர் மேற்கு வீதியில் நடந்தது. மூத்த தலைவர் கலியபெருமாள் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் பிரபுராஜ் துவக்க உரையாற்றினார். கமிட்டி செயலாளர் சரவணன், உறுப்பினர் வடிவேலு வரவு செலவு அறக்கை வாசித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுந்தரராமன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.மாநாட்டில், புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறந்து உணவு பொருட்கள் வழங்க வேண்டும். மது, கஞ்சா போதை இல்லா புதுச்சேரியை உருவாக்க வேண்டும்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும். விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் நன்றி கூறினார்.