/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் கடைகளை திறக்கக் கோரி மா.கம்யூ., போராட்டம் அறிவிப்பு
/
ரேஷன் கடைகளை திறக்கக் கோரி மா.கம்யூ., போராட்டம் அறிவிப்பு
ரேஷன் கடைகளை திறக்கக் கோரி மா.கம்யூ., போராட்டம் அறிவிப்பு
ரேஷன் கடைகளை திறக்கக் கோரி மா.கம்யூ., போராட்டம் அறிவிப்பு
ADDED : பிப் 06, 2024 11:20 PM
புதுச்சேரி : ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என மா.கம்யூ., அறிவித்துள்ளது.
அக்கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் கூறியதாவது;
ரேஷன் கடை இல்லாத ஒரே மாநிலம் புதுச்சேரி. அரிசிக்கு பதில் பணம் கொடுப்பது மக்களை ஏமாற்றும் திட்டம். அரிசிக்காக வங்கியில் போடப்படும் பணம், மகளிர் சுய உதவி குழு கடனுக்கு வங்கிகள் பிடித்தம் செய்து கொள்கிறது.
கடந்த 3 பட்ஜெட்டில் ரேஷன் கடை திறந்து அரிசி, கோதுமை, சிறுதானியம் வழங்குவோம் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தும் இதுவரை திறக்கவில்லை.
மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுக்கிறது.
ஆனால் ரேஷன் கடையை திறக்க ஏன் அனுமதி பெற முடியவில்லை.
புதுச்சேரியில் ரேஷன் கடையை திறந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்க வலியுறுத்தி வரும் 19 முதல் 23ம் தேதி வரை குடிமைப்பொருள் வழங்கல் துறை மூன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடக்கும்.
புதுச்சேரி கவர்னர் மற்றும் மத்திய அரசை கண்டித்து 8ம் தேதி சுதேசி மில் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்' என்றார்.

