sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மூன்று தொகுதிகளில் போட்டியிட இந்திய கம்யூ., திட்டம்; கூட்டணி குழப்பத்திற்கு இடையே காய் நகர்த்தல்

/

மூன்று தொகுதிகளில் போட்டியிட இந்திய கம்யூ., திட்டம்; கூட்டணி குழப்பத்திற்கு இடையே காய் நகர்த்தல்

மூன்று தொகுதிகளில் போட்டியிட இந்திய கம்யூ., திட்டம்; கூட்டணி குழப்பத்திற்கு இடையே காய் நகர்த்தல்

மூன்று தொகுதிகளில் போட்டியிட இந்திய கம்யூ., திட்டம்; கூட்டணி குழப்பத்திற்கு இடையே காய் நகர்த்தல்


ADDED : பிப் 24, 2025 03:42 AM

Google News

ADDED : பிப் 24, 2025 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்று தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ள இந்திய கம்யூ., கட்சி பணிகளை வேகப்படுத்தி வருகிறது.

புதுச்சேரியில் இண்டியா கூட்டணியில் காங்., - தி.மு.க., இந்திய கம்யூ., மா.கம்யூ., விடுதலைச் சிறுத்தைகள் உட்பட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இருப்பினும் புதுச்சேரியில் இண்டியா கூட்டணிக்கு தலைமை தாங்குவதில் காங்., - தி.மு.க., இடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஓடாத வண்டியில் ஏற மாட்டோம் என, தி.மு.க., கவும், வரும் சட்டசபை தேர்தலில் எது ஓடாத வண்டி என்று பார்த்துவிடுவோம் என, காங்., கட்சியும் சவால் விட்டு நேர் எதிரே முறுக்கிகொண்டு நிற்கின்றன.

மறுபக்கம் இண்டியா கூட்டணியில் உள்ள இந்திய கம்யூ., கட்சி சத்தம் இல்லாமல் வரும் சட்டசபை தேர்தலில் 3 தொகுதிகளில் மட்டும் போட்டியிட முடிவு செய்து, களம் இறங்கியுள்ளது. புதுச்சேரி சட்டசபை உருவாக்கப்பட்ட 20.07.1963ல் இருந்து 12ம் சட்டசபை அமைந்த 2006ம் ஆண்டு வரை கம்யூ., கட்சியின் தாக்கம் பெரிய அளவில் இருந்தது.

புதுச்சேரி சட்டசபைக்கு 10 கம்யூ., எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் நாராகலைநாதன் மட்டும் நியமன எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், 2006ம் ஆண்டிற்கு பிறகு கம்யூ., கட்சி யில் இருந்து யாரும் புதுச்சேரி சட்டசபைக்கு செல்லவில்லை. எனவே, இந்திய கம்யூ., கட்சியின் புதிய முடிவு அக்கட்சி தோழர்களை உற்சாகமடைய செய்துள்ளது. மூன்று தொகுதிகளிலும் இப்போதே களம் இறங்கி கட்சியினர் மக்களை சந்தித்து வருகின்றனர்.

கம்யூ., மாநில செயலாளர் சலீம் கூறியதாவது:

புதுச்சேரி அரசியல் வரலாற்றில் காங்., கட்சியும், கம்யூ., கட்சியும் இடம் பெற்ற மக்கள் நல கூட்டணிக்கு தான் போட்டியே இருந்தது.

09.03.1969ல் நடந்த மூன்றாவது சட்டசபை தேர்தலின்போது இதுவரை மக்கள் முன்னணி என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட்டு வந்த கம்யூ., கட்சி முதல் முறையாக கம்யூ., கட்சி என்ற முத்திரையுடன் தி.மு.க.,வுடன் இணைந்து போட்டியிட்டு மூன்று இடங்களில் வெற்றிப் பெற்றது.

இந்திய கம்யூ., கட்சியின் தலைவர் சுப்பையா சுகாதார அமைச்சராக பணியாற்றியுள்ளார். 2006ம் ஆண்டு வரை கம்யூ., கட்சி சட்டசபையில் தனது குரலை மக்களுக்காக பதிவு செய்துள்ளது. இப்போது புதுச்சேரியில் இண்டியா கூட்டணியை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம்.

பல போராட்டங்களை முன்வைத்தோம். குறிப்பாக இண்டியா கூட்டணியில் மத்திய, மாநில அரசுகளின் எதிரான பிரச்னையை கம்யூ., தான் எடுத்து போராட்டம் நடத்தி வருகிறது. மாநில அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, முத்தியால்பேட்டை சிறுமி மரணம், ரெஸ்டோ பார் என அனைத்து பிரச்னைகளையும் போராட்டம் நடத்தி மக்களுக்காக பக்கபலமாக இருந்துள்ளது.

எனவே இந்த முறை இந்திய கம்யூ., குறைந்தப்பட்சம் 3 தொகுதிகளை கேட்டு பெறவுள்ளோம். அந்த தொகுதிகளில் போட்டியிட அனைத்து வேலைகளையும் செய்ய மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். வரும் மாதத்தில் இதற்கான நிலை எடுத்து தேர்தல் கண்ணோட்டத்தில் வாக்காளர்களை சந்திக்க உள்ளோம்' என்றார்.

கூட்டணி குழப்பத்திற்கு இடையே உற்சாகமாக களம் இறங்கியுள்ள இந்திய கம்யூ., கட்சி கடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து தட்டாஞ்சாவடி தொகுதியில் மட்டும் போட்டியிட்டு, 7,522 ஓட்டுகளுடன், அதாவது 31.89 ஓட்டு சதவீதத்துடன் இரண்டாம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us