/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கம்பெனி ஊழியர் காயம்; 3 பேர் மீது வழக்குப் பதிவு
/
கம்பெனி ஊழியர் காயம்; 3 பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : அக் 13, 2025 12:46 AM
புதுச்சேரி; வில்லியனுார் ஆச்சாரியபுரத்தை சேர்ந்தவர் ஜேசுராஜ், 26; குருமாம்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கு, பிரியதர்ஷினி என்ற மனைவியும், ஒரு மகன் உள்ளனர்.
நேற்று முன்தினம் கம்பெனியில் ஜேசுராஜ் வேலை செய்து கொண்டிருந்தபோது, தகரம் வெட்டும் இயந்திரத்தில் இவரது இடது கை எதிர்பாராத விதமாக சிக்கியது. அதில், அவரது 4 விரல்கள் துண்டாகின.
காலாப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜேசுராஜ் புகாரின் பேரில், கம்பெனியின் சூப்பர்வைசர் ராஜாராம், மேலாளர் ஜேக்கப், சுகல் ஆகியோர் மீது மேட்டுப்பாளையம் போலீசார் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் அளிக்காமல் வேலை வாங்கியதாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.