/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆர்ப்போட்டன் கேம்ஸ் 2025 - நிகழ்ச்சி
/
ஆர்ப்போட்டன் கேம்ஸ் 2025 - நிகழ்ச்சி
ADDED : அக் 13, 2025 12:46 AM

புதுச்சேரி; ஆர்ப்போட்டன் பவுண்டேஷன் ஆப் செயல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் ஆர்ப்போட்டன் கேம்ஸ் - 2025 நிகழ்ச்சி நடந்தது.
சமூக ஆர்வலர் சார்லஸ் மார்டின், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிறுவனர் ராஜ்குமார், இணை நிறுவனர் பவித்ரா, முப்படைப் பிரிவின் முன்னாள் வீரர் வீரமணி பங்கேற்றனர். 100க்கும் மேற்பட்ட கல்வி மற்றும் சமூக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. உலகின் முதல் கூட்டு நுண்ணறிவு விழாவாக, அறிவியல், பண்பாடு மற்றும் நெறிமுறைச் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை இணைக்கும் வகையில் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த வினாடி - வினா, எதிர்கால இயந்திரங்கள் குறித்த விளக்கங்கள், படைப்பு ஊடகம் மற்றும் கலைகள், பேஷன் ஷோ நடந்தது. செயற்கை நுண்ணறிவு, அறிவியல் மற்றும் பண்பாடு தொடர்பான நிபுணர்களின் கலந்துரை யாடல் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. செயற்கை நுண்ணறிவினை வைத்து வடிவமைப்பு செய்த ராக்கெட் கல்வியாளர்களின் முன்னிலையில் ஏவப்பட்டது.
நிகழ்ச்சியில், 3 ஆயிரத் திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி மக்களின் ஒருங்கிணைந்த செய்தி ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அனுப்பப்பட்டது.
கடலின் பாதுகாவலர்கள், தெருக்களின் பாதுகாவலர்கள், கலாமின் ஆன்மா போன்ற பல சிறப்பு விருதுகள் சமூகப் பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீ ரத்தாய்மார்கள் நலச் சங்க தலைவர் மோகன், கவுரவத் தலைவர் வீரமணி, பொதுச் செயலாளர் செல்வமணி, ஆலோசனைக் குழுத் தலைவர் ரமேஷ், பொதுநலத் தொடர்பு அதிகாரி ராமமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.