UPDATED : அக் 08, 2026 01:29 AM
ADDED : அக் 08, 2026 01:27 AM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: பைக்கில் சென்ற தனியார் கம்பெனி ஊழியர், கார் மோதி இறந்தார்.
சிதம்பரம் அடுத்த மணலுாரை சேர்ந்தவர் செல்லத்துரை மகன் சதீஷ்குமார்,40; பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பத்தில் உள்ள தனியார் பவர் கம்பெனியில் பணி புரிந்து வந்தார். இவர் நேற்று பணி முடிந்து வீட்டிற்கு பைக்கில் திரும்பினார். பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி அருகே சென்றபோது, புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற கார், பைக் மீது மோதியது. இந்த விபத்தில், சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
