தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கார் டிரைவர் கொலையில் தலைமறைவு ஆசாமிகள் கைது

கார் டிரைவர் கொலையில் தலைமறைவு ஆசாமிகள் கைது

கார் டிரைவர் கொலையில் தலைமறைவு ஆசாமிகள் கைது


UPDATED : அக் 08, 2026 01:29 AM

ADDED : அக் 08, 2026 01:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 01:29 AM ADDED : அக் 08, 2026 01:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: ராமநத்தம் அருகே கார் டிரைவர் கொலை வழக்கில் தலைமறைவான இருவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியை சேர்ந்தவர்கள் அப்துல் அஜீஸ் மகன் சாகுல் ஹமீது, 35; அப்துல் கனி மகன் காதர் சுல்தான் (எ) காதர்,36; மற்றும் பெரோஸ்கான், பிரவீன்பிரகாஷ், மதுரை ராவணன். நண்பர்களான இவர்கள், சென்னை கோயம்பேட்டில் தங்கி வேலை செய்தனர்.

கடந்த 2012ல், கோயம்பேட்டில் இருந்து வாடகை காரில், காரைக்குடிக்கு புறப்பட்டனர். கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் கைகாட்டி அருகே வந்தபோது, காரை நிறுத்திவிட்டு, சிறுநீர் கழிக்க இறங்கியுள்ளனர்.

அப்போது, டிரைவரை கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, காரை கடத்திச் சென்றனர். இது தொடர்பாக ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து, சாகுல் ஹமீது உள்ளிட்ட ஐந்து பேரையும் கைது செய்து, விருத்தாசலம் மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் ஜாமினில் சென்ற ஐந்து பேரில், சாகுல் ஹமீது, காதர் இருவரும் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினர்.

கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்ததை தொடர்ந்து, எஸ்.பி., உத்தரவின்பேரில், ராமநத்தம் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான தனிப்படை போலீசார் சொந்த ஊரில் பதுங்கியிருந்த இருவரையும் பிடித்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us