தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஒரே நாளில் 3 பதக்கங்கள் அடித்து மாஸ் காட்டிய புதுச்சேரி ரேசிங் புயல்

ஒரே நாளில் 3 பதக்கங்கள் அடித்து மாஸ் காட்டிய புதுச்சேரி ரேசிங் புயல்

ஒரே நாளில் 3 பதக்கங்கள் அடித்து மாஸ் காட்டிய புதுச்சேரி ரேசிங் புயல்


UPDATED : அக் 08, 2026 01:29 AM

ADDED : அக் 08, 2026 01:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 01:29 AM ADDED : அக் 08, 2026 01:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்... இன்ஜின் சத்தம் காதைப் பிளக்க, கார்கள் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருக்கின்றன. அந்தப் புகழ்பெற்ற எம்.ஆர்.எப்., இந்திய நேஷனல் ரேசிங் சேலஞ்ச் -–2026 கார் பந்தயத்தில், ஒட்டுமொத்த இந்தியாவையுமே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த இளம் வீரர் ஹேமச்சந்திரன் 28.

தான் கலந்துகொண்ட முதல் தேசியப் போட்டியிலேயே, ஒரே நாளில் 3 பந்தயங்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.

புதுச்சேரியில் இருந்து கார் ரேசிங் களத்துக்கு வந்து தேசிய அளவில் தடம் பதித்த முதல் வீரரான ஹேமச்சந்திரனை, சந்தித்து உரையாடியதிலிருந்து...

உங்கள் பின்னணி என்ன. ஒரு ஐடி இன்ஜினியர் எப்படி ரேசிங் டிராக்குக்குள்ள வந்தீங்க?

நான் புதுச்சேரி லட்சுமி நகர் 3வது மெயின் ரோட்டைச் சேர்ந்த ரவிசந்திரன் - விமலா தம்பதியோட மகன். மணக்குள விநாயகர் கல்லுாரியில பி.டெக் மெக்கானிக் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு ஐ.டி., துறையில் இருக்கேன்.

சின்ன வயசுல இருந்தே எனக்கு கார்னாலே அம்புட்டு பிரியம். பைக்கினை காட்டிலும், கார் ரேசிங் தான் என் பர்ஸ்ட் சாய்ஸ். உண்மையான கார் ஓட்டும் அனுபவத்தை தரும் ரேசிங் சிமுலேட்டரில் கார்களை சீறிப்பாய வச்சப்போ உருவான அந்த ஆர்வம்தான், ஏன் நிஜ டிராக்ல நாம இறங்கி மாஸ் காட்டக்கூடாதுன்னு யோசிக்க வச்சது. அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த ரேசிங் பயணம்.

உண்மையிலேயே இதை நான் எதிர்பார்க்கலங்க. ரெட்லைன் ரேசிங் இந்தியா' டீம் சார்பா எம்.ஆர்.எப்., சலுான்ஸ் - எட்டியோஸ் கப் பிரிவில களமிறங்கினேன். புதுச்சேரில இருந்து முதன்முறையா தேசிய அளவிலான கார் ரேசிங்ல பங்கேற்கிறதே ஒரு பெரிய விஷயம். அதுலயும் என் முதல் என்ட்ரியிலேயே நாட்டுக்கும் நம்ம ஊருக்கும் பெருமை சேர்க்க முடிஞ்சது வார்த்தைகளால சொல்ல முடியாத அனுபவம்.

போட்டிக் களம் எப்படி இருந்தது? குவாலிபையர் ரவுண்ட்ல 3-வது இடம் பிடிச்சப்பவே நம்பிக்கை வந்திடுச்சா?

பத்து சுற்றுகள் கொண்ட போட்டி அது. தகுதிச்சுற்றுல 3-வது இடம் கிடைச்சப்போவே, ஓகே... நம்மகிட்ட ஸ்பீடும் ஸ்டிரேட்டஜியும் கரெக்டா இருக்குனு ஒரு நம்பிக்கை வந்துச்சு. ஆனா மெயின் ரேஸ்லதான் உண்மையான சவாலே இன்னும் இருக்கு.

அந்த 3 ரேஸ்களையும் ஒரே நாளில் ஜெயிச்ச அந்த திரில் தருணங்களைப் பத்தி சொல்லுங்களேன்...

முதல் ரேஸ்சில் 3-வது இடத்துலதான் காரை ஸ்டார்ட் பண்ணேன். ஆனா டிராக்குல டயர்களை ரொம்ப கவனமா ஹேண்டில் பண்ணி, முன்னாடி போன கார்களை ஓவர்டேக் பண்ணி 2-வது இடத்துக்கு வந்தேன். இரண்டாவது ரேஸ்சில் போட்டி பயங்கர டப்பா இருந்தது. பின்னாடி இருந்தவங்க நெருக்குதல் கொடுத்தாலும் விட்டுக்கொடுக்காம போராடி 3-வது இடத்தை தக்க வச்சுக்கிட்டேன்.

மூன்றாவது ரேஸ்சில் இதுதான் கிளைமேக்ஸ். 3-வது இடத்துல கிளம்பி, ஸ்டார்ட்டிங்ல இருந்தே முழு வேகத்தையும் கொடுத்தேன். மின்னல் வேகத்துல இலக்கை தொட்டு 1-வது இடம் பிடிச்சப்போ வந்த சந்தோஷம் இருக்கே... ஆஹா.. ஒரே நாள்ல 2-வது, 3-வது, 1-வதுனு மூணு இடங்களையும் பிடிச்சது கனவு மாதிரி இருந்தது.

அறிமுகப் போட்டியிலேயே மூணு ரேஸ்லயும் டாப் 3 பிடிச்சு, இப்போ ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்ல 2-வது இடத்துக்கு முன்னேறியிருக்கீங்க. அடுத்த இலக்கு என்ன?

கண்டிப்பா சாம்பியன் பட்டத்தை வெல்றதுதான் அடுத்த இலக்கு. என் முதல் போட்டியிலேயே இந்த அளவுக்கு சாதிக்க முடிஞ்சதுக்கு ரெட்லைன் ரேசிங் இந்தியா அணிக்கும், என் பெற்றோர் ரவிசந்திரன் - விமலா மற்றும் குடும்பத்தினருக்கும் நன்றி.

ஆனா, கார் ரேசிங்ங்கிறது ரொம்பவே செலவு குறைந்த விளையாட்டு இல்லைங்க. ஐ.டி வேலை பார்த்துகிட்டே இதை மேனேஜ் பண்றது சவால் நிறைஞ்சது. அடுத்தடுத்த பந்தயங்கள்ல தொடர்ந்து ப ங்கேற்று சாம்பியன் கோப்பையைத் துாக்கணும்னா நல்ல நிதி உதவியும், ஸ்பான்சர்ஷிப்புகளும் ரொம்ப அவசியம். நல்ல ஸ்பான்சர்கள் கிடைச்சா, இன்னும் பல வரலாற்று சாதனைகளை இந்திய மண்ணுல புதுச்சேரி சார்பா என்னால செய்ய முடியும்னு நம்புறேன்.

ரேசிங் சிமுலேட்டர் திரையில பார்த்த கனவை, நிஜ டிராக்ல நிஜமாக்கியிருக்கேன். ஸ்பான்சர்ஷிப் மட்டும் கிடைச்சா சாம்பியன் பட்டம் என் கையில இருக்கும் என்ற நம்பிக்கையான வார்த்தைகளுடன் விடைபெறுகிறார் இந்த இளம் ரேசிங் புயல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us