/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுகாதாரத்துறை பணியிடங்களுக்கான போட்டி தேர்வு: வழிகாட்டுதல் அறிவிப்பு
/
சுகாதாரத்துறை பணியிடங்களுக்கான போட்டி தேர்வு: வழிகாட்டுதல் அறிவிப்பு
சுகாதாரத்துறை பணியிடங்களுக்கான போட்டி தேர்வு: வழிகாட்டுதல் அறிவிப்பு
சுகாதாரத்துறை பணியிடங்களுக்கான போட்டி தேர்வு: வழிகாட்டுதல் அறிவிப்பு
ADDED : ஆக 22, 2025 03:43 AM
புதுச்சேரி: சுகாதாரத் துறையில் ஏ.என்.எம்., மருந்தாளுநர், இ.சி.ஜி., தொழில்நுட்ப வல்லுநர், தியேட்டர் உதவியாளர் மற்றும் சுகாதார உதவியாளர் பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான போட்டித் தேர்வு வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி நடக்கிறது.
அதன்படி, தியேட்டர் உதவியாளர் மற்றும் சுகாதார உதவியாளர் பணிகளுக்கு நாளை 23ம் தேதி காலை 9:00 முதல் 11:00 மணி வரை முதல் தாள், மதியம் 12:30 முதல் 2:30 வரை இரண்டாம் தாள் நடக்கிறது.
ஏ.என்.எம். மகப்பேறு உதவியாளர் பணிக்கு 23ம் தேதி காலை 9:00 முதல் 11:00 மணி வரை முதல் தா ள், மாலை 4:00 முதல் 6:00 மணி வரை இரண்டாம் தாள் நடக்கிறது. மருந்தாளுநர் பணிக்கு 24ம் தேதி காலை 9:00 முதல் 11:00 மணி வரை முதல் தாள், மாலை 4:00 முதல் 6:00 மணி வரை இரண்டாம் தாள் நடக்கிறது.
இ.சி.ஜி., தொழில்நுட்ப வல்லுநர் பணிக்கு 24ம் தேதி காலை 9:00 முதல் 11:00 மணி வரை முதல் தாள், 25ம் தேதி காலை 10:00 முதல் 12:00 மணி வரை இரண்டாம் தாள் தேர்வுகள் நடக்கிறது.
நுழைவு சீட்டில் அவர்களது பாஸ்போர்ட் புகைப்படத்தை ஒட்டி கையொப்பம் இட்டு எடுத்து வர வேண்டும். விண்ணப்பதாரர்கள் நுழைவு சீட்டுடன் தங்களின் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வருவமான பரி பான் கார்டு இவற்றில் ஒன்றின் அசலை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
தேர்வர்களின் கைவிரல் ரேகை பதிவு செய்த பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வு மையத்தின் நுழைவு வாயில், தேர்வு துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் மூடப்படும்.
தேர்வர்கள் கருப்பு வண்ண பால் பாய்ண்ட் பேனா கொண்டு வரவேண்டும். தேர்வு மையங்களில் மொபைல் சேவையை தடுக்க ஜாமர் கருவி, தேர்வறைகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்படும்.
ஹால்டிக்கெட்டை https://recruitment.py.gov.in, என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வின் போது முறையற்ற செயலில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்வதோடு, எதிர்காலத் தேர்வுகளில் பங்கேற்க தடை செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்புடும்.
மேலும் விவரங்களுக்கு 0413-2233338 என்ற எண்ணில் இன்று வரை தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா தெரிவித்துள்ளார்.