ADDED : ஆக 21, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் பேனர் வைத்தவர் மீது கொம்யூன் ஆணையர் போலீசில் புகார் செய்தார்.
பழைய கடலுார் சாலை, அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டம் எதிரில், ரியல் எஸ்டேட் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
அதனால், போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்து நடந்து வருகிறது. இதுபற்றி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷிற்கு புகார் வந்தது. அவர் அளித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.