
கடும் துர்நாற்றம்
வில்லியனுார் தெற்கு மாட வீதி, மின் கட்டண மையத்திற்கு அருகில், கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஜினிமுருகன், வில்லியனுார்.
போக்குவரத்து நெரிசல்
பழைய பஸ் நிலையம், காய்கறி மார்கெட்டில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சுரேஷ், புதுச்சேரி.
பஸ் நிலையத்தில் புழுதி
புதிய பஸ் நிலையத்தில், செம்மண் புழுதி ஏற்படுவதால், பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மகேஷ், புதுச்சேரி.
மின் விளக்குகள் எரியுமா?
நோணாங்குப்பம், ஆற்றுப் பாலத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவு நேரத்தில் அப்பகுதியில் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
கண்ணன், அரியாங்குப்பம்.
எரியாத தெரு விளக்குகள்
புதுச்சேரி நவசக்தி நகர் முதல் தெரு, முதல் குறுக்கு வீதியில் தெரு விளக்குகள் எரிவதில்லை. இதை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன.
பாலு, நவசக்தி நகர்.