அரசு நுாலகம் திறக்கப்படுமா
முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகர் செட்டிக்குளம் வீதியில் உள்ள அரசு நுாலகம் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ளது.
பிரகாஷ்குமார், முத்தியால்பேட்டை.
தெரு மின் விளக்கு எரியவில்லை
வழுதாவூர் சாலை நவசக்தி நகர், ௨வது குறுக்கு தெருவில், மின் கம்பத்தில் உள்ள மின் விளக்குகள் பகலில் எரிந்தும், இரவில் எரியாமல் இருண்டு கிடக்கிறது.
அன்பழகன், நவசக்தி நகர்.
சிக்னல் விளக்கு பழுது
வில்லியனுார், கோட்டைமேடு நான்கு முனை சந்திப்பில், சிக்னல் விளக்கு எரியாமல் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன.
ரகு, கோட்டைமேடு.
கழிவுநீர் தேக்கம்
சின்னமணிக்கூண்டு, லால்பகதுார் சாஸ்திரி தெருவில், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
தினேஷ், புதுச்சேரி.
சாலையில் ஆக்கிரமிப்பு
வில்லியனுார் சாலைகளில் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ரஜினி முருகன், வில்லியனுார்.
சிக்னல் தேவை
அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் அருகே மணவெளி செல்லும் சந்திப்பு பகுதியில் சிக்னல் விளக்கு அமைக்க வேண்டும்.
சங்கர், அரியாங்குப்பம்.