
குறுகலான சாலை
அபிேஷகப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சாலை குறுகலாக உள்ளதால் பஸ்கள் நிற்கும்போது மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை.
சீனிவாசன், அபிேஷகப்பாக்கம்.
ஹைமாஸ் விளக்கு எரியவில்லை
காமராஜர் தொகுதி ரெயின்போ நகர், மாதா கோவில் தெருவில் உள்ள ஹைமாஸ் விளக்கு நாள் முழுதும் எரிகிறது.
திருநாவுக்காரசு, புதுச்சேரி.
சேறும் சகதியுமான சாலை
மூலக்குளம் வெரோனர் நகரில் சாலை வசதி இல்லததால், மழையின்போது செம்மண் சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.
கமல்ராஜ், மூலக்குளம்.
விபத்து அபாயம்
அரியாங்குப்பம் பாலத்தில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு கான்கிரிட் கம்பிகள் வெளியே தெரிவதால் விபத்து அபாயம் உள்ளது.
பச்சையப்பன், அரியாங்குப்பம்.
குண்டும் குழியுமான சாலை
முதலியார்பேட்டை மில் சாலை குண்டும் குழியுமாக கிடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
ஜெயராமன், முதலியார்பேட்டை.
போக்குவரத்து பாதிப்பு
ராஜிவ் சிக்னலில் இருந்து கோரிமேடு செல்லும் சாலையில் வரிசையாக நிறுத்தி வைக்கும் டிராவல்ஸ் வாகனங்களால் கடும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.
விமல், புதுச்சேரி.

