நாய்கள் தொல்லை
முத்தியால்பேட்டை, ஒத்தவாடை தெருவில், நாய்கள் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
பரிமளா,முத்தியால்பேட்டை.
வாகன ஓட்டிகள் அவதி
வில்லியனுார், மார்க்கெட் தெரு, சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மீனா, வில்லியனுார்.
சாலை போடப்படுமா?
வில்லியனுார் ஒதியம்பட்டு, சீனிவாசா கார்டனில், சாலை போடாமல் இருப்பதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கோபி, வில்லியனுார்.
சாலையில் கழிவுநீர்
குருமாம்பேட், அமைதி நகர், முதல் தெருவில், வாய்க்கால் சேதமடைந்து, கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.
சுதாகர், குருமாம்பேட்.
மின் விளக்கு எரியுமா?
வில்லியனுார், பைபாசில் மின் விளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவு நேரத்தில் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
ரஜினி முருகன், வில்லியனுார்.
சாலையில் பள்ளம்
காலாப்பட்டு, தனியார் பெட்ரோல் பங்கு அருகே, சாலையில் மெகா சைஸ் பள்ளங்கள் இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் கிழே விழுந்து காயமடைகின்றனர்.
மகேஷ், காலாப்பட்டு.