நிழற்குடை தேவை
மரப்பாலத்தில், நிழற்குடை இல்லாமல் பஸ்சிற்காக பயணிகள் வெயிலில் காத்திருந்து அவதியடைகின்றனர்.
ரமேஷ், மரப்பாலம்.
சாலை நடுவே பள்ளங்கள்
முருங்கப்பாக்கம் முதல் அரியாங்குப்பம் வரை சாலை நடுவே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், விபத்து ஏற்பட்டு வருகிறது.
மதி, முருங்கப்பாக்கம்.
வாகன ஓட்டிகள் அவதி
உப்பளம் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
நரேஷ், புதுச்சேரி.
கொசு உற்பத்தி
தவளக்குப்பம் ஸ்ரீ அரவிந்தர் நகரில், தண்ணீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி அங்கு குடியிருப்பவர்கள் அவதியடைகின்றனர்.
மீனாட்சி, தவளக்குப்பம்.
சாலை ஆக்கிரமிப்பு
கோர்காடு, படையாட்சி வீதி முதல், சுடுகாடு செல்லும் சாலை வரை ஆக்கிரமிப்பு உள்ளதால், அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலியன்,கோர்க்காடு.
போக்குவரத்து நெரிசல்
இந்திரா சிக்னல் பகுதியில் இருந்து கோரிமேடு நோக்கி இடது புறம் திரும்பும் பகுதியில், இ.சி.ஆர். நோக்கி செல்வோர் குறுக்கில் செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குமரன்,புதுச்சேரி.