
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளங்களால் விபத்து அபாயம்
வழுதாவூர்- கூனிமுடக்கு செல்லும் சாலையின் நடுவேயுள்ள திடீர் பள்ளங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
குரு, வழுதாவூர்.
தெரு மின் விளக்குகள் எரியவில்லை
பத்துக்கண்ணு- பிள்ளையார்குப்பம் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டு உள்ள தெரு மின் விளக்குகள் எரியாததால், அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
சங்கர், பிள்ளையார்குப்பம்.
வாகன ஓட்டிகள் அவதி
காட்டேரிக்குப்பம்- புதுப்பாக்கம் செல்லும் சாலை சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஜெயக்குமார், காட்டேரிக்குப்பம்.

