நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய்களால் அச்சம்
சவரிராயலு வீதியில், நாய்கள் அதிகமாக சுற்றித் திரிவதால், அப்பகுதியில் குடியிருப்பவர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
மதி, புதுச்சேரி.
மக்கள் அவதி
தவளக்குப்பம், ஸ்ரீஅரவிந்தர் நகரில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரவி,
தவளக்குப்பம்.
சிக்னல் விளக்கு எரியுமா?
ராஜிவ் மற்றும் இந்திரா சதுக்கத்தில் உள்ள சிக்னல் விளக்குகள் எரியாமல் இருப்பதால், வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது.
ராமலிங்கம், புதுச்சேரி.
வாகன ஓட்டிகள் அவதி
மணவெளி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கவிதா, மணவெளி.
சாலையில் மின்கம்பம்
முதலியார்பேட்டை, பழைய மார்கெட் சாலையில் மின்கம்பம் இருப்பதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
கபிலன், முதலியார்பேட்டை.