நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சமூக விரோத செயல்
கோரிமேடு, இந்திரா நகர், நாகமுத்து மாரியம்மன் கோவில் எதிரே மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கிறது.
தியாகராஜன், கோரிமேடு.
குண்டும் குழியுமான சாலை
ஜீவானந்தபுரம் முதல் கம்பளிசாமி மடவீதி வரை சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
சிவராஜன், ஜீவானந்தபுரம்.
வாய்க்கால் துார் வாரப்படுமா?
மழை காலம் ஆரம்பித்துள்ளதால், பாகூரில் உள்ள வாய்க்கால்களை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உமாசங்கர், பிள்ளையார்குப்பம்.
சாலை ஆக்கிரமிப்பு
மரப்பாலம் முதல் தவளக்குப்பம் வரையிலான சாலையில் தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
காந்தி, புதுச்சேரி.
கோர்க்காடு படையாட்சி வீதி முதல் சுடுகாடு வரை ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளது.
முருகானந்தம், கோர்காடு.
ஆதார் சேவை மையம் தேவை
அரியாங்குப்பம் பகுதியில் ஆதார் சேவை மையம் அமைக்க வேண்டும்.
பாரதிபிரியன், அரியாங்குப்பம்.