நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுகாதார சீர்கேடு
ரெட்டியார்பாளையம் அஜீஸ் நகர், 2வது குறுக்கு தெருவில், கட்டட கழிவுகளை கொட்டி வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
ரமேஷ், ரெட்டியார்பாளையம்.
சவரிராயலு வீதியில் குப்பைகள் கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
கிருஷ்ணன், புதுச்சேரி.
கழிவுநீர் தேக்கம்
கோரிமேடு இஸ்ரவேல் நகரில், கழிவுநீர் செல்லும் வாய்க்கால் இல்லாமல் இருப்பதால், சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
மில்டன், கோரிமேடு .
பயணிகள் நிழற்குடை தேவை
மூலக்குளத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாமல் இருப்பதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மதி, மூலக்குளம்.
மழைநீர் தேக்கம்
தவளக்குப்பம் - நல்லவாடு சாலையில், மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.
கணபதி, தவளக்குப்பம்.