பகலில் எரியும் தெரு விளக்கு
வழுதாவூர் சாலை நவசக்தி நகர் ௨வது குறுக்குத் தெருவில், தெரு விளக்கு இரவில் எரியாமல் உள்ளதால் இருண்டு கிடக்கிறது.ஆனால் பகலில் எரிந்துகொண்டுள்ளது.
கதிர், நவசக்தி நகர்.
சாலையில் கழிவுநீர் தேக்கம்
ஏம்பலம் பின்னாட்சிக்குப்பம் சீனியர் சிட்டிசன் காலனியில், வாய்க்கால் அடைத்து கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.
ஸ்ரீகாந்த், பின்னாட்சிக்குப்பம்.
நடைபாதை சேதம்
காமராஜர் நகர் தொகுதியில், வெங்கட்டா நகரில், பூங்காவில், நடைபயிற்சி பாதையில், கற்கள் சேதமடைந்துள்ளது.
முத்துகிருஷ்ணன், வெங்கட்டா நகர்.
சுகாதர சீர்கேடு
அய்யங்குட்டிபாளையம் குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதால் சுகாதர சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஜெயக்குமார், வில்லியனுார்.
காலி மனையில் புதர்கள்
லாஸ்பேட்டை அவ்வை நகரில், காலிமனைகளில், புதர்கள் மண்டி கிடப்பதால், பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
பாலசுப்ரமணியன், லாஸ்பேட்டை.
புறவழிச்சாலையில் மெகா பள்ளம்
அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் மெகா பள்ளம் விழுந்துள்ளதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
கதிரவன், அரியாங்குப்பம்.

