நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின் விளக்கு எரியவில்லை
நெல்லித்தோப்பு வ.உ.சி., தெருவில் பல நாட்களாக மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
ராஜ், நெல்லித்தோப்பு.
வீணாகும் குடிநீர்
நெல்லித்தோப்பு லெனின் தெருவில், குடிநீர் வீணாக கீழே செல்கிறது.
சுகுமார், நெல்லித்தோப்பு.
காலி மனையில் புதர்
திருபுவனை திருமுருகன் நகர், காந்தி வீதி ஆகிய பகுதியில் காலிமனையில், புதர்கள் மண்டி கிடப்பதால், பாம்புகள் நடமாட்டம் இருக்கிறது.
சாந்தி, திருபுவனை.
மாடுகளால் விபத்து அபாயம்
வில்லியனுார் பைபாஸ் சாலையில், மாடுகள் நிற்பதால், வாகன விபத்து நடந்து வருகிறது.
ரஜினி முருகன், வில்லியனுார்.
மழை நீர் தேக்கம்
தவளக்குப்பம், அபிேஷகப்பாக்கம் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
சுரேஷ், தவளக்குப்பம்.