நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய்கள் தொல்லை
காரமணிக்குப்பம் பகுதியில் நாய்கள் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ரவிச்சந்திரன், காரமணிக்குப்பம்.
சுகாதார சீர்கேடு
எல்லைப்பிள்ளைச்சாவடி, தந்தை பெரியார் நகர், 4வது குறுக்கு தெருவில், குப்பைகள் சாலையில் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
உமா, எல்லைப்பிள்ளைச்சாவடி.
காமராஜ் சாலையில், குப்பைகளை சரியாக எடுக்காமல் இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
ராணி, சாரம்.
ரோட்டில் மின்கம்பம்
சாரம் வெங்கடேஸ்வரா நகர், 6வது குறுக்கு தெருவில், மின்கம்பம் ரோட்டில் உள்ளதால்,வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது.
பிரேமா, சாரம்.
துார்நாற்றம்
பெரியக்காலாப்பட்டு இ.சி.ஆரில், வாய்க்கால் மேலே சிலாப் போடாமல் இருப்பதால், துர்நாற்றம் வீசி வருகிறது.
சிவராஜ், பெரியக்காலாப்பட்டு.

