மின்விளக்குகள் எரியாததால் அவதி
புதுச்சேரி கடற்கரை சாலையில் விடியற்காலையில் மின்விளக்குகள் எரியாததால் நடைபயிற்சி மேற்கொள்ளும் முதியோர், பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தெருநாய்களும் அதிக அளவில் சுற்றித்திரிவதால் அச்சத்தில் நடக்கின்றனர்.
குமார், வாணரப்பேட்டை.
குப்பைகள் தேக்கம்
சாமிபிள்ளைத் தோட்டம் இளங்கோவடிகள் தெருவில், குப்பை வண்டி வரததால், குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
ராணி, சாமிபிள்ளைத் தோட்டம்.
காமராஜர் நகர் தொகுதி, கென்னடி முதல் மெயின் ரோட்டில், குப்பைகள் கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
லட்சுமி, கென்னடி கார்டன்.
மின் கம்பியில் கொடி படர்ந்துள்ளது
லாஸ்பேட்டை அவ்வை நகர், 28வது குறுக்கு தெருவில், உயர்மின் அழுத்த கம்பிகள் மீது செடி, கொடிகள் படர்ந்துள்ளதால், அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலசுப்ரமணியன், லாஸ்பேட்டை.
சாலையில் பள்ளம்
நைனார்மண்டபம் சாலையில் பைப்பை புதைக்க தோண்டிய பள்ளத்தால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
கதிர், மரப்பாலம்.
சிக்னல் பழுது
இந்திராகாந்தி சதுக்கத்தில், சிக்னல் விளக்கு எரியாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்கின்றனர்.
ரவிச்சந்திரன், புதுச்சேரி.