நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை பணி துவங்குமா?
தேங்காய்த்திட்டு மெயின் ரோட்டில், சாலை அமைக்க ஜல்லி கொட்டப்பட்டு, பணிகள் நடக்காமல் உள்ளது.
ஏழுமலை, தேங்காய்த்திட்டு.
சிமென்ட் சிலாப் சேதம்
லாஸ்பேட்டை, தாகூர் நகர் பக்தவச்சலம் 10வது குறுக்கு தெரு, வாய்க்காலில் உள்ள சிமென்ட் சிலாப் உடைந்து சேதமடைந்துள்ளது.
நாகராஜன், லாஸ்பேட்டை.
வாய்க்காலில் ஆக்கிரமிப்பு
வில்லியனுார் மூர்த்தி நகர் வாய்க்காலில், ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருண், வில்லியனுார்.
தெரு விளக்கு எரியுமா?
ஒட்டம்பாளையம், காமராஜர் ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
ஜெயபிரகாஷ், ஒட்டம்பாளையம்.