ADDED : ஏப் 02, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரதிபலிப்பான் அமைக்கப்படுமா?
மதகடிப்பட்டு-மடுகரை சாலை இரவு நேரங்களில் இருண்டு கிடப்பதால் சாலையோரங்களில் உள்ள மரங்களில் பிரதிபலிப்பான் பதிக்கவேண்டும்.
ரவிக்குமார், சூரமங்கலம்.
சாலை பள்ளங்களால் விபத்து
மடுகரை மந்தைவெளி பஸ் நிறுத்தத்தில் இருந்து கரியமாணிக்கம் பஸ் நிறுத்தம் வரை 1 கி.மீ., துாரத்திற்கு சாலை நடுவே ஆங்காங்கே உள்ள பள்ளங்களால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது.
ஜெகநாதன், மடுகரை.
பகலிலும் எரியும் மின் விளக்குகள்
வில்லியனுார் சங்கராபரணி ஆற்று புதிய மேம்பாலத்திற்கு தெற்கே மங்கலம், ஏம்பலம் செல்லும் சாலையில் மின் விளக்குகள் தொடர்ந்து பகலிலும் எரிந்து வருவதால் மின்சாரம் வீணாகிறது.
சிவக்குமார், வில்லியனுார்.

