ADDED : ஆக 24, 2026 03:39 AM
வேகத்தடை அமைக்கப்படுமா?
கோரிமேடு சாலை தட்டாஞ்சாவடி தொழில்பேட்டை நுழைவு வாயில் சந்திப்பில் வேகத்தடையை அகற்றியதால் விபத்து ஏற்பட்டு வருவதால் மீண்டும் அமைக்கப்படுமா?
கண்ணன், தட்டாஞ்சாவடி.
மது குடிப்பதால் மக்கள் அச்சம்
கோரிமேடு சாலையில் மது குடிப்பதால் அவ்வழியாக செல்லும் பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
பிரபாகரன், கோரிமேடு.
தெரு நாய்கள் தொல்லை
தட்டாஞ்சாவடி தொழில்பேட்டை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
பரணி, தட்டாஞ்சாவடி.
கொசு தொல்லை
வில்லியனுார் மணவெளி தண்டுக்கரை சாலை ஏரி வாய்க்காலில் குப்பைகள்அடைத்து உள்ளதால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.
குமார், மணவெளி.
டவுன் பஸ் தேவை
புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பாரதிதாசன், புதுச்சேரி.
தெரு விளக்கு சீரமைக்க வேண்டும்
நைனார்மண்டபம், திவான் கந்தப்பா நகரில் சில வீதிகளில் தெருவிளக்கு எரியாமலும், உடைந்து தொங்கி கொண்டுள்ளது.
வேல், புதுச்சேரி.
